தேர்தல் கமிஷனுக்கு மிரட்டல்… திருச்சி மேற்கு வேட்பாளர் மீது நடவடிக்கை பாயுமா…?

480
Spread the love

திருச்சி மேற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் பத்மநாபன் இன்று பிரச்சாரத்திற்காக தனது ஆதரவாளர்களுடன் சென்று கொண்டிருந்தார்.   புத்தூர் அருணா தியேட்டர் அருகே பால் ஞானசேகர் தலைமையிலான பறக்கும் படை போலீசார்  இருசக்கர வாகனத்தில் பேரணியாக வந்த அதிமுக மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பத்மநாபனை  தடுத்து நிறுத்தினர். அவரிடம்,  இருசக்கர வாகனத்திற்கு அனுமதி கிடையாது என தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அதிமுகவினர் தேர்தல் பறக்கும்படையினரை  முற்றுகையிட்டு வாக்குவாதத்தில்

ஈடுபட்டனர். அப்போது பறக்கும் படையினரை மிரட்டியதாக தொிகிறது. இதனை தொடர்ந்து தடுத்து நிறுத்திய பறக்கும் படையினரை வசை மாரி பொழிந்தபடி தடையை மீறி பேரணியாக சென்றனர். இது குறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி பால் ஞானசேகர் உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் அதிமுகவினர் தடுத்தனர், தடையை மீறி இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்றனர், தேர்தல் விதிமுறைகளை மீறி 500க்கும் மேற்பட்டோர் ஒன்றாக கூடினர் என்று அந்த புகாரில் தொிவித்துள்ளார்.  பறக்கும் படையினருக்கு மிரட்டல் விடுத்த பத்மநாபன் மீது தேர்தல் கமிஷனின் நடவடிக்கை பாயும் என்று தொிகிறது. 

LEAVE A REPLY