பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து திருச்சியில் காங்., ஆர்ப்பாட்டம்…..

88
Spread the love

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக திருச்சியில் திருநாவுக்கரசர் எம்பி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி தலைமை தபால் நிலையம் எதிரே உள்ள பெட்ரோல் பங்க் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர்கள் ஜவஹர், கோவிந்தராஜ், மாநில பொதுச்செயலாளர் சரவணன், பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ், சிறுபான்மை பிரிவு துணை தலைவர் பேட்ரிக் ராஜ்குமார், முன்னாள் மேயர் சுஜாதா, ராஜா நசீர் உள்ளிட்ட காங்கிரசார் கலந்து கொண்டனர். 

LEAVE A REPLY