அழகிரியை வரவேற்று காங்.,‘சாதி’ விளம்பரம்… தூத்துக்குடியில் பரபரப்பு

1264
Spread the love

கடந்த 22ம்தேதி போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசரடி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் . இவருடைய மகன் பென்னிக்ஸ் இவரும் மர்மமான முறையில் இறந்த சம்பவம் தமிழக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டிதது பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அதிமுக சார்பில் கடம்பூர்ராஜீ தலைமையிலான  குழுவினர்  சந்தித்து ஆறுதல் கூறியதோடு 25 லட்சத்திற்கான காசோலையை அளித்தனர்.

அதேபோல் திமுக சார்பில் எம்பி கனிமொழி சந்தித்து 25 லட்சத்திற்காகன காசோலையை அளித்தார். இளைஞர் அணி செயலாளர் உதயநிதியும் சந்தித்து ஆறுதல் கூறினார். இப்படியாக பல்வேறு அரசியல் பிரமுகர்களும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் ஆறுதல் கூறிவருகின்றனர்..

இன்று காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்கிறார்.. அழகிரியை வரவேற்று தூத்துக்குடி காங்கிரஸ் மற்றும் எம்பி வசந்தகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பல்வேறு நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்துள்ளனர்.. அவ்வாறு கொடுக்கப்பட்டுளள விளம்பரத்தில் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் பெயருக்கு பின்னால் சாதியின் பெயரை குறிப்பிட்டுள்ள விவகாரம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. இது குறித்து அரசியல் பிரமுகர் கூறுகையில் ‘ துக்கம் விசாரிக்க வருவதைக்கூட காங்கிரஸ் விளம்பரப்படுத்தியிருப்பது மிகவும் வேதனையானது.. மேலும் சாதியின் பெயரை போட்டுக்கொள்வதில் தவறு இல்லை.. குடும்ப நிகழ்ச்சியான பத்திரிக்கையில் போட்டுக்கொள்ளலாம்..ஆனால் காங்கிரஸ் விளம்பரத்தில் அனைத்து தரப்பினர்களுக்கான பிரதிநிதிகளான காங் எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் சாதியை குறிப்பிட்டு விளம்பரம் கொடுத்திருப்பது நியாயமா? . இதனை தவிர்த்திருக்க வேண்டும் என்றார்.. 

LEAVE A REPLY