அழகிரி செஞ்ச வேல.. காங்கிரசை கழட்டி விடும் திமுக

331

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் அடுத்த கட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக, எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், டில்லியில் நேற்று  காங்கிரஸ் தலைவர் சோனியா, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் இதில் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. மத்தியில் உள்ள, பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் திரட்டும் முயற்சியாகவும், இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது.   இக்கூட்டத்தில் கலந்து கொள்ள போவதில்லை என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே ஆகியோரும் இந்த கூட்டத்தில் தாங்கள் கலந்து கொள்ள போவதில்லை என அறிவித்தனர். அதுமட்டுமல்லாமல் பல ஆண்டுகளாக கூட்டணியில் இருக்கும் திமுக சார்பிலும் யாரும் பங்கேற்காதது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் காங் கூட்டம் நடத்திய போது டிஆர் பாலு டில்லியில் தான் இருந்தார். ஆனால் உள்ளாட்சித் தேர்தல் குறித்து காங் தமிழகத் தலைவர் அழகிரி  தன்னிச்சையாக வெளியிட்ட அறிக்கையின் வெளிப்பாடு  தான் திமுகவின் முடிவுக்கு காரணம் என்கின்றனர் விபரம் தெரிந்தவர்கள்.

LEAVE A REPLY