காங்கிரஸ் எங்களுக்கு எதிரி அல்ல! சிவசேனா

135
Spread the love

சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் அளித்துள் பேட்டி; சிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு கேட்டு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் சிவசேனா ஏதாவது ஒப்பந்தம் செய்து உள்ளதா என கேட்டதற்கு, ஒப்பந்தங்கள் செய்து கொள்ள வதற்கு நாங்கள் வியாபாரிகள் அல்ல. அரசியல் என்பது சிவசேனாவுக்கு வியாபாரமும் அல்ல. லாபம் மற்றும் இழப்பு என்ற வார்த்தைகள் எங்கள் அகராதியில் இல்லை. எந்த எம்.எல்.ஏ.க்களும் கட்சி தாவுவார்கள் என நான் எண்ணவில்லை. இந்த முறை அந்த எண்ணம் நிறைவேறாது. ஆட்சி அமைப்பதற்காக எந்தவொரு அரசியல்வாதியையும் வாங்கி விடலாம் என்ற ஆணவம் இனி இந்த மாநிலத்தில் எடுபடாது.

சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி மகாராஷ்டிராவிற்கு எதிரி அல்ல. மாநிலத்தில் நிலையான அரசாங்கத்தை அமைக்க காங்கிரஸ் தலைவர்கள் ஏதேனும் முடிவு எடுத்திருந்தால் அதை நாங்கள் வரவேற்கிறோம் என்றார்.

LEAVE A REPLY