ஆட்டம் காட்டும் காங்கிரஸ்..தவிக்கும் சிவசேனா

171
Spread the love

மகாராஷ்டிராவில் கூட்டணி அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளது. இதற்காக சரத் பவார், டில்லியில் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார். இதனால்  விரைவில் கூட்டணி அரசு அமைய உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு சற்று தயக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. அக்கட்சி சிவசேனாவை முழுமையாக நம்ப தயங்குகிறது. சிவசேனா எந்நேரமும் பாஜக பக்கம் சாயும் என்று காங்கிரஸ் நினைப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கூட்டணி அரசு அமைக்க பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்ரேவுக்கு முதல்வர் பதவி வழங்கப்படும். 5 ஆண்டுகளுக்கும் அவரே அப்பதவியில் நீடிப்பார்.

மொத்தமுள்ள 42 துறைகளில், 15 துறைகள் சிவசேனாவுக்கு, 14 துறைகள் தேசியவாத காங்கிரசுக்கும், 13 துறைகள் காங்கிரஸ் கட்சிக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.

சபாநாயகர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படும். முன்னாள் முதல்வர் பிருத்விராஜ் சவுகான் பெயர் சபாநாயகர் பதவிக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

இது குறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்ததாவது; மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைவதில், காங்கிரஸ் கட்சி எப்போதும் அவசரம் காட்டியதில்லை. புதிய அரசில் காங்கிரஸ் பங்கேற்குமா அல்லது வெளியில் இருந்து ஆதரவு அளிக்குமா என்ற கேள்விக்கு தற்போது விடையளிக்க முடியாது என்று தெரிவித்தனர்.

முதல்வர் பதவிக்கு சிவசேனாவின் சுபாஷ் தேசாய், சட்டசபை தலைவர் ஏக்நாத் ஷிண்டே, ஆதித்ய தாக்ரே உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபட்டாலும், உத்தவ் தாக்ரேதான் முதல்வர் என்பதில் தேசியவாத காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது.

LEAVE A REPLY