”கூல்டிரிங்ஸ்” குடித்த சிறுமி மயங்கி விழுந்து உயிரிழப்பு…

140
Spread the love

சென்னை பெசன்ட் நகரில் வசித்து வரும் சதீஷ் – காயத்ரி தம்பதியின் இளைய மகள் தரணி(13). வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த தரணி நேற்று அவரது தாயிடம் இருந்து காசு வாங்கிச் சென்று அருகே உள்ள மளிகை கடையில் ரஸ்னா வாங்கி குடித்துள்ளார். சில நிமிடங்களிலேயே சிறுமியின் உடல்நிலை மோசமாகிவிட்டது. சிறுமி மூக்கிலிருந்து சிவப்பு நிறத்தில் சளி வந்ததோடு மட்டுமல்லாமல் வாந்தி எடுக்க ஆரம்பித்துள்ளார். இதை கவனித்த சிறுமியின் சகோதரி தனது தாயை அழைத்து வந்துள்ளார்.

'குளிர்பானம்' வாங்கிக் குடித்த சிறுமி மயங்கி விழுந்து உயிரிழப்பு!

அப்போது சிறுமி மயங்கி விழுந்து உடல் முழுவதும் நீல நிறத்தில் மாறியுள்ளது. உடனடியாக சிறுமியை ஆஸ்பத்தரிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் தகவலறிந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சிறுமி பருகிய குளிர்பானத்தை கைப்பற்றி ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். குளிர்பானத்தால் தான் சிறுமி உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY