கொரோனா பீஸ் 12.20 லட்சம்.. சென்னை பிவெல் ஆஸ்பத்திரி அடாவடி

129
Spread the love

தமிழக அரசு தனியார் மருத்துவமனைகளுக்கான கொரோனா சிகிச்சை கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. இதன்படி பொது வார்டில்  லேசான அறிகுறிகளுடன் அனுமதிக்கப்படும் நபர்களுக்கு a1 மற்றும் a2 கிரேடுக்கு ரூ.7,500 மற்றும் a3 மற்றும் a4 கிரேடுக்கு ரூ.5,000 நிர்ணயிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு a1 ,a2, a3, a4 கிரேடுக்கு ரூ.15,000 நிர்ணயித்து, இக்கட்டணத்திற்கு மேலான தொகையை நோயாளிகளிடமிருந்து வசூலிக்கக் கூடாது என்றும் அரசு எச்சரித்தது. இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பிவெல் ஆஸ்பத்திரி (BE WELL) ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளி ஒருவரிடம் இருந்து 19 நாளுக்கு 12.20 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.  கூடுதல் கட்டணம் வசூல் செய்தது உறுதி செய்யப்பட்ட நிலையில் பி வெல் ஆஸ்பத்திரிக்கு கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்பட்ட அரசு அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.  மற்றபடி வேறு எந்த நடவடிக்கையும் இல்லை.. அரசு விதிமுறையினை மீறிய ஆஸ்பத்திரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.. 

LEAVE A REPLY