இஸ்ரோ மையத்தில் 350 ஊழியர்களுக்கு கொரோனா…

28
Spread the love

கொரோனா அலையின் 2-வது தாக்கம் நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வருகின்றது. இதற்கிடையே ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோ மையத்தில் 350 ஊழியர்களுக்கு கொரோனா உறுதியானது. இதில் 2 பேர் பலியானதாகவும், அந்த தகவல் தெரிவிக்கிறது. சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மைய அதிகாரிகள் இது தொடர்பாக கூறும்போது…. ஏப்ரல் மத்தியில் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் கொரோனா பரவத் துவங்கியது. அப்போது தான் திருப்பதி தொகுதிக்கான எம்.பி. இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது விண்வெளி மைய ஊழியர்கள் தேர்தல் பார்வையாளராக பணியாற்றினர். அந்த நேரத்தில் இருந்தே நாள்தோறும் 30 முதல் 40 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதனால் 50 சதவீத பணியாளர்களுடன் சுழற்சி முறையில் பணியாற்றும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஒப்பந்தப்பணியாளர்கள் பணிக்கு வரவழைக்கப்பட வில்லை. தொற்று பரவல் கட்டுப்பாட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என இவ்வாறு கூறினார்கள்.

LEAVE A REPLY