கொரோனா அதிகரிப்பு… மதுரையில் 20 தெருக்களுக்கு சீல்….

148
Spread the love

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியதை தொடர்ந்து, பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், மதுரையில் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கியது. கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக மதுரை மாநகரில் முதற்கட்டமாக 20 தெருக்கள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் 18 தெருக்களை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கொரோனா பரவல் அதிகரிக்கும் பகுதிகளில் முக்கியத்துவம் அளித்து தடுப்புப் பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 592 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY