Skip to content
Home » கொரோனவுக்கு தமிழ்நாட்டில் ஒருவர் பலி…. இந்தியாவில் 797 பேருக்கு தொற்று உறுதி

கொரோனவுக்கு தமிழ்நாட்டில் ஒருவர் பலி…. இந்தியாவில் 797 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 225 நாட்களில் பதிவான அதிகபட்ச தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும். இதற்கு முன்பு கடந்த மே 19-ந்தேதி 865 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 2 பேர், மராட்டிய மாநிலம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் தற்போது கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4,091 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!