கொரோனாவுக்கு எஸ்ஐ மற்றும் ஏட்டு பலி…

241
Spread the love

சென்னை பாதுகாப்பு பிரிவில் எஸ்ஐ பணியாற்றி வந்த சின்னக்கண்ணு என்பவர் கொரோனா காரணமாக ஆஸ்பத்திரியில்  சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சின்னக்கண்ணு நேற்று உயிரிழந்தார்.எஸ்.ஐ சின்னக்கண்ணுவின் சொந்த ஊரான வேலூர் மாவட்டத்தின் சேனூரில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதேப்போன்று,சென்னை ஆயுதப்படை ஏட்டு பணியாற்றி வந்த கமலநாதன் என்பவர் கடந்த மாதம் 25 ஆம் தேதி காய்ச்சல் காரணமாக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.அதன்பின்னர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று கமலநாதன் உயிரிழந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த சின்னக்கண்ணு மற்றும் கமலநாதன் ஆகிய இருவருக்கும் போலீசார் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

LEAVE A REPLY