10ம் தேதி முதல் மீண்டும் கட்டுப்பாடு … தமிழக அரசு அறிவிப்பு…

1647
Spread the love
தமிழகத்தில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருவதால் தேசிய பேரிட மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழக அரசு அறிவிப்பு வௌியிட்டுள்ளது.. நாளை மறுநாள் முதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது…
 • கோயம்பேட்டு சந்தையில் சில்லறை கடைகளுக்கு தடை.
 • காய்கறி, மளிகை கடைகளில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.
 • மாவட்டங்களிலும் மொத்த காய்கறி சந்தைகளிலும் சில்லறை கடைகளுக்கு தடை.
 • 45 வயதுக்கு மேற்பட்டோர் 2 வாரத்துக்குள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
 • 10ம் தேதி முதல் கோயில் திருவிழாக்களுக்கு தடை.
 • நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி நடைபெறும்.
 • கல்வி, சமுதாய , பொழுது போக்கு கலாச்சார நிகழ்வுகளில், உள் அரங்குகளில் 200 நபருக்கு மட்டும் அனுமதி.
 • பொழுது போக்கு பூங்கா, வணிக வளாகங்களில் 50% மட்டுமே அனுமதி.
 • திருமண நிகழ்வுகளில் 100 பேர் மட்டுமே பங்கேற்கலாம்.
 • பேருந்துகளில் இருக்ககைளில் மட்டுமே அனுமதி. நின்றுக்கொண்டு பயணம் செய்ய அனுமதியில்லை.
 • தியேட்டர்களில் 50 % இருக்கைகள் மட்டுமே அனுமதி.
 • இறுதி ஊர்வலங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும்.
 • சினிமா, சின்னதிரை படப்பிடிப்புகளில் பங்கேற்போர் தடு்பூசி, ஆர்டிபிசி ஆர் பரிசோதனை செய்வது அவசியம்..
 • வௌிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கான இ-பாஸ் நடைமுறை தொடரும்.
 • ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2 பயணிகளுக்கு மட்டுமே அனுமதி.
 • வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க தொழிற்சாலைகளுக்கு அனுமதி.
 • நெறிமுறைகளை பின்பற்றாத தொழிற்சாலைகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். என தமிழக அரசு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY