கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. சென்னை தியாகராய நகரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு மாநகராட்சி சார்பில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் கடைகள் மற்றும் மால்களை முன்னெச்சரிக்கையாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது