கொரோனா மாத்திரை,,..தமிழகத்தில் கிடைக்க வாய்ப்பு இல்லை

342
Spread the love

 மிதமான மற்றும் லேசான கொரோனா பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க, ‘ஃபேவிஃபிராவிர்’ என்ற தடுப்பு மருந்துக்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு கழகம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இந்த மாத்திரை விரைவில் மருத்துவமனைகள், மருந்தகங்களில் கிடைக்கும். 34 மாத்திரைகள் கொண்ட ஒரு பட்டையின் விலை 3,500. ஒரு மாத்திரையின் (200 மிகி) விலை ரூ. 103 ஆகும். இந்த மாத்திரை தமிழகத்தில் எப்போது கிடைக்கும் என மாநில  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டதற்கு .. ஃபேவிஃபிராவிர்’ மாத்திரைக்கு ஐசிஎம்ஆர் அனுமதி வழங்கவில்லை. ஐசிஎம்ஆர் விதிகளை பின்பற்றியே தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே ஐ.சி.எம்.ஆர் அனுமதி கொடுத்த பின்பே ‘ஃபேவிஃபிராவிர்’ மாத்திரையை தமிழகத்தில் கொள்முதல் செய்வது தொடர்பாக முடிவு எடுக்கப்படும். அதோடு மட்டுமல்லாமல் ‘ஃபேவிஃபிராவிர்’ மாத்திரையின் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. அவற்றிற்கெல்லாம் விரிவான விடை கிடைத்த பின்னரே, ஃபேவிஃபிராவிர்’ மாத்திரையை பின்பற்றுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார். 

LEAVE A REPLY