கொரோனாவுக்கு தம்பதி பலி…

170
Spread the love

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பனங்காடு காந்திபுரம் பகுதியில் வசித்து வந்தவர் சக்திவேல் (40). தச்சு தொழிலாளி. இவரது மனைவி பூர்ணிமா (36). இவர்களுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகும் நிலையில் குழந்தைகள் இல்லை. இதனிடையே கடந்த ஜுன்1 ஆம் தேதி சக்திவேலுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை தொடர்ந்து, சில நாட்களில் பூர்ணிமாவும் உடல்நல குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து, இருவருக்கும் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பூர்ணிமா இறந்தார். அவரை தொடர்ந்து, அதிகாலை சக்திவேலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கொரோனா பாதிப்பால் தம்பதி அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் தாராபுரம் பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY