பலியான மதுரை நபருக்கு கொரோனா எப்படி? ‘திடுக்’ தகவல்

1358

மதுரை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 54 வயதான நபருக்கு, நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மதுரை அரசு ஆஸ்பத்தரியில் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி, நேற்று நள்ளிரவில் அவர் உயிரிழந்தார். இதன் மூலம் தமிழகம் கொரோனாவுக்கு முதல் பலியை பதிவு செய்துள்ளது. வெளிநாடு தொடர்பில்லாத அவருக்கு கொரோனா எப்படி? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இறந்த நபர் ஒரு கட்டட கான்டிராக்டர். அதே பகுதியில் உள்ள ஒரு மசூதியில் நிர்வாகியாக உள்ளார். அடிக்கடி மசூதிக்கு சென்று வந்துள்ளார். சமீபத்தில் பக்கத்து வீட்டில் 60 பேர் பங்கேற்ற விழாவிற்கும் அவர் சென்றுள்ளார். அங்கு அவருடன் தொடர்பில் இருந்த அத்தனை பேரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 30 வீடுகள் சுகாதாரத்துறை கண்காணிப்பில் வந்துள்ளது. அங்கு அடையாள ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவரின் மனைவி, மகனும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ரத்த, தொண்டைச்சளி மாதிரி எடுத்து கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. அவர்கள் வசிக்கும் தெருப்பகுதி, மசூதி, இதர பகுதிகளில் நேற்று கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அதேபோல் சமீபத்தில் தாய்லாந்தில் இருந்து வந்த 8 பேர் மதுரையில் உள்ள பல்வேறு மசூதிகளுக்கு சென்று வழிபாடு நடத்தினர். பாதிக்கப்பட்டவர் வழக்கமாக செல்லும் பள்ளிவாசலுக்கும் சென்றனர். பாதிக்கப்பட்டவர் தான் அவர்களை கவனித்ததாக கூறப்படுகிறது. எனவே 8 பேரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்றும், அவரிடம் இருந்தே பரவியிருக்கலாம் என்றும் சுகாதாதரத்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதனால் 8 பேரும் சென்ற விளாம்பட்டி, மீனாம்பாள்புரம், எஸ்.எஸ்.காலனி உள்ளிட்ட மசூதிகளில் நேற்று கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. 8 பேரும் சந்தித்த மசூதி நிர்வாகிகள் விவரத்தை மாநகராட்சி ஊழியர்கள் சேகரித்தனர். அவர்களை வீட்டுத்தனிமையில் வைக்க ஏற்பாடு நடக்கிறது. இதற்கிடையே புறநகர் பகுதியில் தங்கி இருந்த தாய்லாந்து நாட்டினர் 8 பேரையும் சுகாதாரத்துறையினர் நேற்று தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து தனிமைப்படுத்தினர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. 

LEAVE A REPLY