கொரோனா சோகம்.. இறுதி சடங்கை வீடியோ காலில் பார்த்த மகன்

811
Spread the love

கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே ஆலக்கோடு பகுதியில் வசித்த ஆபேல் அவுசேப் 70. மார்ச் 8ம் தேதி அதிகாலை 4:30 மணிக்கு கட்டிலில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். கோட்டயம் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையறிந்து கத்தாரில் போட்டோகிராபராக பணியாற்றும் இளைய மகன் லினோ, 24, தந்தையை காண விமானத்தில் வந்தார். மார்ச் 9ல் கோட்டயம் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு சென்ற அவர், தனக்கு இருமல் மற்றும் காய்ச்சல் இருந்ததால்  கொரோனா பாதிப்பு இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறினார்.

இதனால் அவர் லினோ சிறப்பு வார்ட்டில் சேர்ந்தார். ஆனால் அன்று இரவு 8:30 மணிக்கு தந்தை ஆபேல் இறந்து விட்டதாக லினோவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தந்தையை இறுதியாக காண அனுமதிக்குமாறு லினோ கெஞ்சினார். ஆனால் டாக்டர்கள் அனுமதிக்கவில்லை. ஒரே ஆஸ்பத்திரி என்றாலும் தந்தையை பார்க்க முடியாமல் தவித்தார். பிறகு அறையின் ஜன்னல் வழியாக தந்தையின் உடல் ஆம்புலன்சில் செல்வதை பார்த்து கண்ணீர் விட்டார். பி்ன்னர் நண்பர் உதவியுடன் வீடியோ கால் மூலம் தனது தந்தையின் இறுதி சடங்கை பார்த்தார்.  இதனை லினோ தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். 

LEAVE A REPLY