திருச்சியில் கொரோனாவுக்கு முதல் பலி உண்மையா? இல்லையா?

313
Spread the love

தூத்துக்குடியைச் சேர்ந்த 58 வயதான நபர்  நாளிதழ் ஒன்றின் சென்னை அலுவலகத்தில் பணியாற்றிவந்தார். அங்குள்ள மெஸ் இன்சார்ஜ் ஆக பணியாற்றிய அவர் கோயம்பேடு மார்கெட்டிற்கு சென்று தினமும் காய்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்கி வந்துள்ளார். இந்த நிலையில் ஏற்கனவே காய்ச்சல் இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருச்சி ஜேகே நகர் பகுதியில் உள்ள தனது உறவினரின் வீட்டிற்கு வந்த போது தொடர்ந்து தொண்டை வலி மற்றும் மூச்சுத்திணறல் இருந்ததன் காரணமாக அவர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கொரோனா உறுதி செய்யப்படவில்லை. இதனையடுத்து திருச்சி கேஎம்சியில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்த சென்னை நபர் நேற்று அவர் இறந்தார். இதனையடுத்து சுகாதாரத்துறையினரின் வழிகாட்டுதலின்படி அவரது உடல் மிகுந்த பாதுகாப்புடன் ஒரு சில உறவினர்களுடன்  ஓயாமரி இடுகாட்டில் எரியூட்டப்பட்டது. இறந்த நபருக்கு கொரோனா இல்லை என அதிகாரிகள் கூறினாலும் உடலை வீட்டிற்கு கொண்டு செல்லாமல் ஆஸ்பத்திரியில் இருந்து நேரடியாக இடுகாட்டிற்கு கொண்டு சென்ற முறை ஆகியவை பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

LEAVE A REPLY