வீடு வீடாக பரிசோதனை..தமிழக அரசுக்கு மத்திய அரசு அறிவுரை

96
Spread the love
நமது நாட்டைப் பொறுத்தமட்டில் மராட்டியம், தெலுங்கானா, தமிழகம், ராஜஸ்தான், அரியானா, குஜராத், ஜம்மு காஷ்மீர், கர்நாடகம், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம் ஆகிய 10 மாநிலங்களில் உள்ள 38 மாவட்டங்களில்தான் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது. இந்த மாவட்டங்களின் கலெக்டர்கள், மாநகராட்சி கமிஷனர்கள், மாவட்ட ஆஸ்பத்திரி சூப்பிரண்டுகள், மருத்துவ கல்லூரி முதல்வர்கள் ஆகியோருடன் உயர் மட்ட ஆய்வுக்கூட்டம் ஒன்றை மத்திய சுகாதாரத்துறை செயலாளர் பிரீத்தி சுதன் காணொலி காட்சி வழியாக நேற்று நடத்தினார். மாநில அரசு அதிகாரிகள் மேற்கொள்ள மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்திய நடவடிக்கைகள் வருமாறு:-
 
* சுகாதார உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த சரியாக திட்டமிட வேண்டும். போதுமான எண்ணிக்கையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். படுக்கை வசதி மேலாண்மைக்கு ஒரு அமைப்பு ஏற்படுத்தப்படவேண்டும்.
 
* ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளின தேவைக்கு ஏற்ப தேவையான உதவிகளை வழங்குவதற்கு மூத்த அதிகாரிகள் அமர்த்தப்படவேண்டும்.
 
* களப்பணியை பொறுத்தமட்டில், மாநகராட்சி அதிகாரிகள் தலைமை தாங்கி, கட்டுப்பாட்டு நடவடிக்கைக்கு முழு மாநகராட்சி உள்கட்டமைப்பும் பயன்படுத்தப்பட வேண்டும்.
 
* கொரோனா வைரஸ் தொற்று மேலாண்மை முயற்சிகளுடன், பொதுமக்களுக்கு வழக்கமாக கிடைக்க வேண்டிய மற்றும் அத்தியாவசிய சுகாதார சேவைகளை வழங்கவும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
 
* கொரோனா நோயாளிகளை சரியான நேரத்தில் கண்டறிவதற்கு, வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும். கணக்கெடுப்பு குழுக்களை இதற்காக மேம்படுத்த வேண்டும். திறமையான ஆம்புலன்ஸ் நிர்வாகம் இருக்க வேண்டும். ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளை திறம்பட சோதனை செய்ய வேண்டும். படுக்கை வசதி நிர்வாகம், சிகிச்சை மேலாண்மை ஆகியவற்றில் வாரம் முழுவதும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் குழுக்களை அமர்த்தி கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் பலி விகிதங்களை குறைப்பதை உறுதி செய்ய முடியும்.
 
* பரிசோதனைக்கூடங்கள் பரிசோதனை முடிவுகளை உரிய நேரத்தில் தருவதையும் உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் நோயாளிகளை சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை தர முடியும். பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்ப்பதற்கும். உரிய நேரத்தில் சுகாதார சேவைகளை அணுகுவதற்கும், உள்ளாட்சி பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளையும் தொடர்புபடுத்தி, மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அவர்கள் ஒத்துழைப்பு அளித்து உதவுமாறு செய்ய வேண்டும்.
 
இவ்வாறு மாநில அரசு அதிகாரிகளுக்கு, மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் அறிவுறுத்தல்களை வழங்கினர் என மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

LEAVE A REPLY