கொரோனா பாதிப்பு.. டிவிக்கு ஒரு நியாயம்.. பேப்பருக்கு ஓரு நியாயமா? ..

322
Spread the love

சென்னையில் பத்திரிகையாளர்கள் பலருக்கு கொரோனா வந்தது. அந்த வகையில் சத்தியம் டிவி அலுவலகம் மூடப்பட்டது. இந்தநிலையில், ஒருநாளிதழிலில் பணியாற்றும் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள தகவலை அதிகாரிகள் மறைத்து விட்டதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. முதலில் இந்த நிறுவனத்தில் பணியாற்றி கோயம்பேட்டில் இருந்து தினமும் காய்கறி வாங்கி வந்த மெஸ் பொறுப்பாளர் ஒருவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது. அவர் திருச்சிக்கு வந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தது பழைய கதை.. அவருடன் நெருங்கி பழகிய நிருபர் மற்றும் 2 சப் எடிட்டருக்கும் கொரோனா உறுதி  செய்யப்பட்டு விட்டதாகவும் அவர்கள் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்த கொரோனா தகவல் எதையுமே வெளியில் தெரியாமல்  சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடந்தையுடன் நிர்வாகம் மறைத்து விட்டதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ள நாளிதழுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா? என கேள்விக்கேட்கின்றனர் சத்தியம் டிவி நிர்வாகத்தார்.. 

LEAVE A REPLY