13ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி.. மத்திய அரசு அறிவிப்பு..

59
Spread the love

கொரோனாவிற்கு மருந்தாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்டு மற்றும் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி வரும் 13ம் தேதி முதல் பொதுமக்களுக்கு போடப்படும் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. சென்னை,  மும்பை, கொல்கத்தா மற்றும் கர்னல் ஆகிய 4 இடங்களில் தடுப்பூசி சேமிப்பு மையங்கள் அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ஏற்கனவே தடுப்பூசி அதிகபட்சமாக ரூபாய் 292 ஆக இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY