கடத்தப்பட்ட அதிமுக பெண் கவுன்சிலர் திருப்பதியில் மீட்பு..

245
Spread the love

திருத்தணி அருகே உள்ள மத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோட்டி. திருப்பூரில் ஆடை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி பூங்கொடி. இவர்களது நான்கு மாத குழந்தை நிஷாந்த். உள்ளாட்சி தேர்தலில் திருத்தணி ஒன்றியம் 2-வது வார்டில் பூங்கொடி அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். திருத்தணி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் கடந்த 11-ந் தேதி நடைபெறாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் கவுன்சிலர் பூங்கொடி அவரது மகன் நிஷாந்த், தாய் வசந்தி ஆகியோர் கடத்தப்பட்டதாக அவரது கணவர் கோட்டி கடந்த 10-ந் தேதி திருவள்ளூர் எஸ்பியிடம் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் நேற்று கவுன்சிலர் பூங்கொடி உள்பட 3 பேரும் திருப்பதியில் உள்ள லாட்ஜில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. இது பற்றி உடனடியாக திருப்பதி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக குறிப்பிட்ட லாட்ஜை சுற்றி விரைந்து சோதனையிட்டனர். இதில் ஒரு அறையில் பூங்கொடி, அவரது மகன் நிஷாந்த், தாய் வசந்தி ஆகியோர் அடைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.
அவர்களை போலீசார் மீட்டனர். போலீசார் வருவதை அறிந்ததும் கடத்தல்காரர்கள் அனைவரும் தப்பி சென்றுவிட்டனர். அவர்களை பிடிக்க விசாரணை நடந்து வருகிறது.

LEAVE A REPLY