அக்காவுடன் கள்ளக்காதல்… நண்பர்களுடன் சரமாரி வெட்டு

262
Spread the love
சென்னை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட மொண்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் 34 வயதான ஆனந்தன். சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன ஆனந்தன், பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.

அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் உதயா, சுரேந்தர். இவர்கள் 3 பேரும் சிறுவயதில் இருந்து ஆனந்தனுக்கு நண்பர்கள். நண்பர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்கள் வீட்டிற்கு செல்வது வழக்கம் அப்படி சென்று வருகையில் ஆனந்தனுக்கும் சகநண்பர் உதயாவின் அக்காவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆனந்தனுக்கு திருமணம் ஆகியும் தனது நண்பரின் அக்காவிடம் அத்துமீறி பழகியதாக தெரிய வந்துள்ளது. தனது அக்காவிற்கும் நண்பர் ஆனந்திற்கும்மான விவகாரம் உதயாவிற்கு தெரியவர தனது அக்காவை கண்டித்துள்ளார் உதயா. மேலும் ஆனந்தனிடமும் இது பற்றி பேசிய உதயா நண்பனுடனான பழக்கத்தை குறைத்துக்கொண்டுள்ளார். ஊரடங்கு காரணமாக ஆனந்தனின் வரம்புமீறிய காதல் எல்லை தாண்டியுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த உதயா கடந்த வெள்ளி இரவு ஆனந்தனின் வீட்டிற்கு தனது மற்றொரு நண்பரான சுரேந்தருடன் சென்றுள்ளார். அப்போது வீட்டிற்கு வெளியே ஆனந்தனை அழைத்த உதயா அவரை கண்டித்தபோது, நண்பர்களுக்குள் மோதல் வெடித்துள்ளதுஒரு கட்டத்தில் திடீரென தனது இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்த உதயா ஆனந்தனை சரமாரியாக வெட்டினார். இதில் அவருக்கு வலது கை மணிக்கட்டு மற்றும் இடது கை, மார்பு ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டு விழுந்தது.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஆனந்தன் கூச்சலிட உதயாவும், சுரேந்தரும் அங்கிருந்து தப்பி ஓடினர். மனைவியின் கண்முன்னே ஆனந்தன் ரத்த வெள்ளத்தில் சரிய அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்து ஆனந்தனின் மனைவி ஜெனிபர் அளித்த புகாரின்பேரில் செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய உதயா, சுரேந்தர் ஆகியோரை கைது செய்தனர். இருவர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சகோதரியாக பார்க்கவேண்டிய நண்பனின் அக்காவிடம் ஏற்பட்ட உறவு உயிருக்கு உயிரான நண்பர்களை பகைவர்களாக மாற்றிய சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது

LEAVE A REPLY