பீகார் மாநிலம் விஷாலி மாவட்டத்தை சேர்ந்தவர் மனீஷ்ராம் (23) சோனிதேவி (20) தம்பதி. இவர்களுக்கு 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. தம்பதிக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் சோனிதேவி, மாநில பெண்கள் கமி‌ஷனிடம் அளித்துள்ள  புகார் மனு;
 2 மாதமாக எனது கணவரின் நடவடிக்கை சரியில்லை. அவர் 10 நாட்களுக்கும் மேலாக முகசவரம் செய்யவில்லை. தாடியுடன் இருக்கிறார். தினமும் பல் துலக்குவது இல்லை. குளிக்கவும் இல்லை. இதை சகித்துக் கொள்ள முடியவில்லை. எங்களுக்கு குழந்தை இல்லை. சராசரி மனிதன் செய்ய வேண்டிய கடமைகளை அவர் செய்வது இல்லை. இந்த காரணங்களால் என் கணவருடன் சேர்ந்து வாழ பிடிக்கவில்லை.
எனவே எனக்கு அவரிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டுகிறேன். விரைந்து இதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு  கூறியிருந்தார்.

இது குறித்து மாநில மகளிர் கமி‌ஷன் உறுப்பினர் பரத்மா கூறும்போது, விவாகரத்துக்கு சோனி தேவி சொல்லும் காரணம் மிகவும் சாதாரணமாக உள்ளது. அவருக்கு அறிவுரை கூறி இருக்கிறோம்.2 மாதம் அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

LEAVE A REPLY