நீதிபதிக்கு கொரோனா…. கோர்ட்டுக்கு பூட்டு..

200
Spread the love

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகா அலுவலக வளாகத்திற்குள் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன. உரிமையியல் நீதிமன்றத்தில் பெண் நீதிபதிக்கு ெகாரோனா நோய்த்தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தாலுகா அலுவலக வளாகத்திற்குள் செயல்பட்டு வரும் உரிமையியல் நீதிமன்றம்,  நேற்று முதல் 3 நாள்களுக்கு அடைக்கப்பட்டது. இதனால் தாலுகா அலுவலக வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் வழக்கறிஞர்கள், அலுவலர்கள்  உள்ளிட்டோரும் கொரோனா  பரிசோதனை மேற்கொண்டனர்.

LEAVE A REPLY