எகிறும் கொரோனா…..4 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு….

61
Spread the love

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 4276 பேர் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். சென்னையில் ஒரே நாளில் 1520 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 15 ஆயிரத்து 386 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 19 பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர். இதனால் தமிழகத்தின் உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்து 840 ஆக உயர்ந்துள்ளது. 

திருச்சியில் இதுவரை 862 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று 131 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 54 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், 938 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் திருச்சியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 568 ஆக உயர்ந்துள்ளது. இன்று திருச்சியில் கொரோனாவிற்கு ஒருவர் பலியாகி உள்ளார். இதனால் பலி  எண்ணிக்கை 188 ஆக உயர்ந்துள்ளது. 

LEAVE A REPLY