திருச்சியில் கொரோனா பலி எண்ணிக்கை 200ஐ தொட்டது….

219
Spread the love

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 13,776 பேர் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.  இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 51 ஆயிரத்து 487 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 78 பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர். இதனால் தமிழகத்தின் உயிரிழப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்து 395 ஆக உயர்ந்துள்ளது.

திருச்சியில் இதுவரை 2688 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று 320 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 215 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், 2792 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் திருச்சியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்து 541 ஆக உயர்ந்துள்ளது. இன்று திருச்சியில் கொரோனாவிற்கு ஒருவர் பலியாகி உள்ளதால்,  பலி  எண்ணிக்கை 200 ஆனது.

LEAVE A REPLY