Skip to content
Home » இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல்…4பேர் பலி….. 752 பேர் பாதிப்பு

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல்…4பேர் பலி….. 752 பேர் பாதிப்பு

  • by Senthil

உலகம் முழுவதும் மீண்டும்  கொரோனா பரவல் ஏற்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 10 மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் உயர்ந்து வருவதாக நேற்று சுகாதார அமைச்சகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் (சனிக்கிழமை) மட்டும் 752 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரேைைானாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,420 ஆக அதிகரித்துள்ளது. மே 21 ம் தேதிக்குப் பிறகு இது அதிக அளவிலான எண்ணிக்கை எனக் கூறப்படுகிறது.

அதே சமயத்தில், கர்நாடகாவில் ஒருவரும், கேரளாவில் இரண்டு பேரும் ராஜஸ்தானில்  ஒருவரும் இறந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை  அறிவித்துள்ளது.. நால்வர் பலியானதையடுத்து பலி எண்ணிக்கை 5,33,332 ஆக உயர்ந்துள்ளது. அதாவது இறப்பு விகிதம் 1.18 ஆக பதிவாகியுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்தில்  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்றும் அதாவது கடந்த 28 நாட்களில் மட்டும் 8.5 லட்சம் பேர் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!