2 லட்சம் டோஸ் கோவிஷீல்டு சென்னை வந்தடைந்தது…..

14
Spread the love

கொரோனா 2வது அலையின் பரவல் அதிகரித்து வரும் சூழலில் தடுப்பூசியின் தேவைகளும் அதிகரித்து வருகிறது. அதிலும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் போட்டுக்கொள்ளலாம் என்ற அறிவிப்பிற்கு பிறகு தடுப்பூசியின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மும்பையிலிருந்து 2 லட்சம் டோஸ்கள் அடங்கிய கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னைக்கு வந்தடைந்தது. விமானம் மூலம் சென்னை வந்தடைந்த தடுப்பூசிகள் டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY