கொரோனாவுக்கு எதிராக கோவாக்சின் 93.4% செயல்படுவதாக அறிவிப்பு..

250
Spread the love

கொரோனாவுக்கு எதிராக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசி கோவாக்சின் ஒன்றாகும். இவைத்தவிர சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசி மற்றும் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இந்தியாவில் செலுத்தப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் தற்போது கொரோனா 2வது அலையின் தீவிரம் காரணமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. உருமாறிய டெல்டா பிளஸ் வகை கொரோனாவால் 3வது அலை வரக்கூடும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசி, டெல்டா பிளஸ் வகை கொரோனாவை எதிர்க்கும் திறன் கொண்டது என ஐ.சி.எம்.ஆர்., தெரிவித்துள்ளது. கடந்த மாதம் பாரத் பயோடெக் நிறுவனத்தின் இறுதி பகுப்பாய்வில், ‛கோவாக்சின் தடுப்பூசி அறிகுறிகளுடன் கூடிய கொரோனா வைரசுக்கு எதிராக 77.8 சதவீத எதிர்ப்பு திறனுடனும், டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக 65.2 சதவீத எதிர்ப்பு திறனையும் பெற்றிருந்தது. தீவிரமான கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு 93.4 சதவீதம் எதிர்ப்பு திறனை கொண்டிருக்கிறது என்பதனை சமீபத்திய ஆய்வுகள் தெரிவிப்பதாக’ ஐதராபாத்தைச் சேர்ந்த பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY