நாகை கம்யூ எம்பி செல்வராஜ் மீது கத்தி வீச்சு

455

நாகை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த எம்.செல்வராசு போட்டியிட்டு வெற்றி பெற்றார். வேதாரண்யம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கோடியக்காடு, அகஸ்தியன்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு எம்பி செல்வராஜ் நன்றி தெரிவித்தார். இரவு 8 மணி அளவில் அகஸ்தியன்பள்ளி காளியம்மன் கோவில் தெரு பகுதியில் செல்வராசு எம்.பி. திறந்த ஜீப்பில் நின்றபடி பேசிக்கொண்டிருந்தார்.  ஜீப்பின் முன்பாக பொதுமக்கள் நின்று கொண்டிருந்தனர்.இந்த நிலையில் கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர் செல்வராசு எம்.பி. மீது கத்தியை வீசினார். ஆனால் அந்த கத்தி அதிர்ஷ்டவசமாக அவர் மீது படாமல் ஜீப்பின் முன்பக்கத்தில் பட்டு கீழே விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உடனே கத்தி வீசிய மர்ம நபரை போலீசார் மற்றும் கூட்டணி கட்சியினர் தேடிப்பார்த்தனர். ஆனால் அவரை அங்கு காணவில்லை. போலீசாரின் பாதுகாப்பையும் மீறி மர்ம நபர் செல்வராசு எம்.பி. மீது கத்தி வீசிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

LEAVE A REPLY