ரஷ்ய மருந்து வேலை செய்தால் அதிர்ஷ்டம் தான்.. சிஎஸ்ஐஆர் கருத்து

131
Spread the love

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்யா அதிபர் விளாதிமிர் புதின் நேற்று அறிவித்தார். இதுகுறித்து இந்தியாவின் சிஎஸ்ஐஆர் அமைப்பின் செல்லுலார் அன்ட் மாலிக்ளர் பயாலஜி அமைப்பின் இயக்குநர் ராகேஷ் கே. மிஸ்ரா கருத்து தெரிவிக்கையில் …  ரஷ்யா தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து நமது நாட்டினருக்கு வேலை செய்தால் நாம் அதிர்ஷ்டசாலிதான். ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்தின் செயல்திறன், பாதுகாப்பு குறித்து யாருக்கும் தெரியாது. அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் முறையாக 3-வது கட்ட கிளினிக்கல் பரிசோதனையை மக்கள் மீது நடத்தவில்லை. தடுப்பு மருந்தின் செயல்திறனை அறிய வேண்டுமானால், மிகப்பெரிய மக்கள் கூட்டத்தில் அந்த மருந்தை செலுத்தி 2 மாதங்களாவது காத்திருக்க வேண்டும்.

தடுப்பூசி செலுத்தப்பட்ட மக்கள் எவ்வாறு இருக்கிறார்கள், நோய்தொற்றுக்கு ஆளாகிறார்களா, இல்லையா, வேறு ஏதாவது பாதிப்பு வருகிறதா என்பதை கண்டறிய வேண்டும். கடந்த 2 மாதங்களுக்கு முன் ரஷ்யா அரசு ஒரு சட்டத்தை இயக்கிறது. அதன்படி மிகவிரைவாக கொரோனா தடுப்பு மருந்தை தயாரிக்க வேண்டும் என்று தீர்மானித்தது. அதன் காரணாகவே தடுப்பு மருந்தை மிகப்பெரிய அளவில் மக்களுக்கு கொடுத்து பரிசோதித்தார்களா எனத்தெரியாது. அவ்வாறு பரிசோதித்திருந்தால், புள்ளிவிவரங்கள் கிடைக்க வேண்டும். எதையும் ரகசியமாக வைத்துக்கொண்டு மருந்துகளை வெளியிட முடியாது என்றார் மிஸ்ரா.

 

 

LEAVE A REPLY