இப்படியும் நடக்குமா? … அதிர்ச்சியடைந்த திருச்சி போலீஸ் அதிகாரிகள்

500
Spread the love

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே காளியம்மன் கோவில் தெருவில் சிட்டி யூனியன் வங்கி கிளை உள்ளது. அங்கிருந்து ‘லோகி cash ஏஜென்சி’ நிறுவனத்தினர் பணம் பெற்று துறையூர், உப்பிலியபுரம் பகுதியில் உள்ள ஏ.டி.எம்.களில் பணம் நிரப்புவது வழக்கம். வழக்கம் போல் நேற்று இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களான முசிறியை சேர்ந்த சரவணன் (வயது 38), திருச்சி அரியமங்கலம் அம்பிகாபுரத்தை சேர்ந்த அருண் (33) ஆகியோர் சிட்டி யூனியன் வங்கிக்கு பணம் வாங்க வந்தனர். வங்கியில் பணம் செலுத்தும் கவுண்ட்டரில் ரூ.16 லட்சத்தை பெற்று அதனை ஒரு பையில் வைத்தனர். மற்றொரு பையில் ரூ.18 லட்சத்தை வாங்கி நிரப்பிக் கொண்டிருந்தனர். அப்போது ரூ.16 லட்சம் வைத்திருந்த பையை திடீரென காணவில்லை. இதனால் சரவணன், அருண் ஆகியோர் அதிர்ச்சியடைந்தனர். அங்கிருந்தவர்களிடம் பணம் வைத்திருந்த பை குறித்து கேட்டனர். ஆனால் அவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வங்கியில் உள்ளே மற்றும் வெளியே உள்ள சிசிடிவி கேமிராக்களின் பதிவுகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால் ஏடிஎம்களில் பணத்தை எடுத்து செல்லும் லோகி cash ஏஜென்சியினர் தன்னுடை ஆட்களுக்கு உரிய பாதுகாப்ப வழங்கவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காரணம் பணத்தை எடுத்து செல்ல வானங்கள் பயன்படுத்தப்படவில்லை. அவர்களுக்கு உரிய துப்பாக்கிய ஏந்திய செக்யூரிட்டிகள் வழங்கப்படவில்லை. நேற்றைய சம்பவத்தில் கூட சரவணன் மற்றும் அருண் ஆகியோர் 34.5 லட்சம் பணத்தை பைகளில் எடுத்துக்கொண்டு டூவீலர்களில் போய் சத்திரம் பஸ் ஸ்டாண்ட் போய் அங்கிருந்து பஸ்களில் போய் துறையூர் போய் இறங்கி கொண்டு பின்னர் டூவீலர்களில் போய் ஏடிஎம்களில் பணம் நிரப்புவோம் என கூறியுள்ள தகவல் போலீஸ் அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.மேலும் லோகி cash ஏஜென்சி ஒய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் நடத்தி வரும் நிறுவனம் என்கிற தகவலும் போலீசாருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. 

LEAVE A REPLY