மின்சாரம் தாக்கி திருச்சியில் கல்லூரி மாணவர் பலி….

107
Spread the love

திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை பெரியார் நகரை சேர்ந்தவர் கார்த்திக்(20). இவர் ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று திருச்சி பாலக்கரை எடத்தெரு சன்னதி தெருவில் உள்ள ஒரு வீட்டில் பெயிண்டிங் வேலையில் ஈடுபட்டு வந்தார். சாரத்தின் மேல் நின்று பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்த போது மின்சார வாரிய மின்கம்பியில் இவரது தலை உரசி உள்ளது. இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட கார்த்திக் பலத்த காயம் அடைந்துள்ளார். கார்த்திக் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பாலக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY