திருச்சி மாவட்டம்.மணப்பாறை அருகேயுள்ள தீராம்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி (45) தோல் வியாபாரி.  இவரது மனைவி சுப்புலக்ஷ்மி (42). 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், இன்று அதிகாலை சுப்புலட்சுமி வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர் சுப்புலட்சுமியின் பின்பக்க தலையில் இரும்பு கம்பியால் தாக்கியதுடன், அரிவாள் மற்றும் கத்தியால் கை, கால்கள் மற்றும் பல இடங்களில் வெட்டினர். அவரது அலறல் சத்தம் கேட்டு சுப்பிரமணி மற்றும் மகன்கள் ஓடிவந்தனர். அப்போது மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். சுப்புலட்சுமி மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் மற்றும் டிஎஸ்பி குத்தாலலிங்கம் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY