தஹில் ரமணியுடன் சி.வி.சண்முகம் சந்திப்பு!

260
Spread the love

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமணி மேகாலயா மாநிலத்திற்கு மாற்றப்பட்டார். இதை பரிசீலனை செய்ய அவர் விடுத்த கோரிக்கையை கொலிஜியம் நிராகரித்தது. இதையடுத்து தஹில் ரமணி தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அவரது ராஜினாமா இதுவரை ஏற்கப்படவில்லை. இந்நிலையில் அவரது தலைமையிலான அமர்வுக்கு 75 வழக்குகள் இன்று பட்டியலிடப்பட்டிருந்தது. ஆனால் அவர் நீதிமன்றத்துக்கு வரவில்லை. இதையடுத்து  அந்த 75 வழக்குகளும் 2 வது அமர்வுக்கு மாற்றப்பட்டது. இதனால் இன்று உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மத்தியில் பரபரப்பு நிலவியது.

இந்நிலையில் தலைமை நீதிபதி மாற்றத்தை கண்டித்து நாளை தமிழகம்- புதுவை வக்கீல்கள் சங்கத்தினர் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர். இதற்கிடையே சற்றுமுன் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தலைமை நீதிபதி இல்லத்திற்கு சென்ற சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தஹில்ரமணியை சந்தித்து பேசினார்.

LEAVE A REPLY