பாரீன் டூர்.. ஆலோசனை கூட்டத்தில் ராகுல் ஆப்சென்ட்

172

கட்சி தலைவராக ராகுல் மீண்டும் பொறுப்பேற்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இத்தகைய சூழலில் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா தலைமையில் செயற்குழு கூட்டம் இன்று நடந்தது. இதில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரியங்கா வாத்ரா, ப.சிதம்பரம், ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். பல முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசிப்பதற்காக கூட்டப்பட்டுள்ள இக்கூட்டத்தில் ராகுல் கலந்து கொள்ளவில்லை. அவர் தற்போது இந்தியாவில் இல்லாத காரணத்தால் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என கூறப்படுகிறது. தலைவர் பதவியில் இருந்து விலகியது முதல் கட்சியின் முக்கிய செயல்பாடுகளில் ராகுல் கலந்து கொள்ளாமல் இருந்து வருவது கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY