தண்ணீரில் மூழ்கி தந்தை, 2 குழந்தைகள்பலி…

93
Spread the love

திருமங்கலம் அடுத்த கீழகோட்டை லட்சுமி புரத்தை சேர்ந்தவர் அழகர்சாமி(35). லாரி டிரைவரான இவருக்கு தனலெட்சுமி(28) என்ற மனைவியும், சங்கீதா(10) என்ற மகளும், யோகவர்ஷினி(7), மகா முகேஷ்(4) ஆகிய குழந்தைகள் உள்ளனர். மனைவி தனலெட்சுமி கூலி வேலைக்கு சென்ற நிலையில் தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு அழகர் சாமி புதுக்குளம் கண்மாயிக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக 4 பேரும் நீரில் மூழ்கி உள்ளனர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். ஆனால் அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அழகர்சாமி, சங்கீதா, மகாமுகேஷ் ஆகியோர் இறந்து விட்டதாக தொிவித்தனர். யோகவர்ஷினிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இது குறித்து திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

LEAVE A REPLY