‘தாதா 87 PART-2’ படத்தில் பால்தாக்ரே கெட்டப்பில் சாருஹாசன்

74
Spread the love

நடிகர் கமல்ஹாசனின் மூத்த நடிகர் சாருஹாசன் கதாநாயகனாக நடித்த ‘தாதா 87’ திரைப்படம் கடந்த வருடம் வெளியானது. இப்படத்தில் 87 வயதில் லோக்கல் தாதா வேடத்தில் கதாநாயகனாக நடித்திருந்த சாருஹாசன் பலராலும் பாராட்டப்பட்டார். விஜய் ஸ்ரீ கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்கியிருந்தார்.  தற்போது 90 வயதான சாருஹாசனை மீண்டும் கதாநாயகனாக்கி இருக்கிறார் இயக்குநர் விஜய் ஸ்ரீ.

உள்ளூரில் சாதாரண தாதாவாக இருக்கும் ஒருவர் தன் அறிவின் பலத்தை கொண்டு உலக அரங்கில் தவிர்க்க முடியாத இடத்தை பிடிக்கும் கதை உருவாகிறது. தாதா 87 இரண்டாம் பாகமாக தயாராகி வரும் இந்த படத்தில் நடிகர் சாருஹாசன் பால்தாக்ரே கெட்டப்பில் நடித்து வருவது தான் பரபரப்பு.. 

LEAVE A REPLY