தர்பார் 150 கோடி வசூல்..

152
 
ரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளியாகியுள்ள படம் தர்பார். தர்பார்  உலகம் முழுவதும்  7000 திரைகளில் வெளியிடப்பட்டு உள்ளது.
 
 ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
 
ரஜினிகாந்தின் தர்பார் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் நல்ல துவக்கத்தை தந்து உள்ளது.   உலக் பாக்ஸ் ஆபீசில்  150 கோடி ரூபாய் வசூலித்து தர்பார் படம் சாதனை படைத்துள்ளது என தயாரிப்பு நிறுவனம்  அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

LEAVE A REPLY