பணத்துக்காக 13வயது மகள் நரபலி.. புதுகையில் தந்தை, நண்பர் கைது

111
Spread the love

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள நொடியூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர் (55), இவரது மனைவி இந்திரா. இவர்களது மகள் வித்யா (14). தச்சங்குறிச்சியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த அவர் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் வீட்டில் இருந்து வந்தார். கடந்த மே மாதம் 18ம் தேதி மதியம் தண்ணீர் பிடிக்க சென்ற சிறுமி 1 கிமீ மயங்கிய நிலையில் கிடந்தாள். இது குறித்து தகவல் கிடைத்தும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அன்று இரவ சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக இறந்தாள்.

இச்சம்பவத்தில் சிறுமியின் கழுத்து அறுக்கப்பட்டிருந்தது. எனவே யாரும் கொலை செய்திருக்கலாம் என்கிற சந்தேகம் போலீசாருக்கு இருந்து வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் சிறுமியின் தந்தை பன்னீர்செல்வம் மற்றும் உறவினர் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் மந்திரவாதி ஒருவர் ‘ அதிகஅளவில் சொத்து, பணம்  கிடைக்க வேண்டும் என்றால்  சிறுமியை நரபலி கொடுக்க வேண்டும் என கூறியதாகவும் இதன் அடிப்படையில் தனது மகளின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக பன்னீர்செல்வம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.  தலைமறைவான மந்திரவாதியை போலீசார் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY