மகளுக்கு பாலியல் தொல்லை… தந்தை போக்சோவில் கைது…

126
Spread the love

மதுரை மகபூப்பாளையம் முனியாண்டி கோயில் தெருவை சேர்ந்தவர் கூலி தொழிலாளி செல்வகுமார். இவர் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் பெண்ணை, சமீபத்தில் 2ம் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத போது மனைவியின் 8 வயது மகளை மிரட்டி, முனியாண்டி பாலியல் ரீதியாக தொல்லை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து, சிறுமியிடம் தாய் விசாரித்தபோது, அவர் தனக்கு நேர்ந்த கொடுமையை கண்ணீர் மல்க கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், தல்லாக்குளம் மகளிர் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் முனியாண்டி, சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதியானது. இதனை அடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.

LEAVE A REPLY