தீபா இனி போயஸ் கார்டன் போகலாம்… கோர்ட் அனுமதி

230
Spread the love

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க, தனி நிர்வாகியை நியமிக்கக் கோரி அதிமுக உறுப்பினர் வக்கீல் புகழேந்தி மற்றும் ஜானகிராமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஜெ.தீபா, தீபக் ஜெ. சொத்துக்களுக்கு உரிமை கோரியிருந்தனர். அவர்களுக்கு ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்கும் உரிமை  கிடையாது என வழக்கில் கூறியிருந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இது குறித்து விளக்கம் அளிக்க தீபா, தீபக்குக்கு கோர்ட் சம்மன் அனுப்பியிருந்தது.

இந்நிலையில் இன்று தீபா,தீபக் கோர்ட்டில் ஆஜராயினர். அப்போது நீதிபதி மக்களால் நான், மக்களுக்காக நான் என்ற ஜெயலலிதாவின் சொத்துக்கள் சிலவற்றை ஏழைகளுக்காக செலவிட்டால் என்ன? என்று கேட்டார். அதற்கு தீபா சொத்துக்கள் எங்களுக்கு உரிமையானபின் ஒரு அறக்கட்டளை அமைத்து ஏழைகளுக்கு உதவ திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் போயஸ் கார்டன் இல்லம் அரசு கட்டுப்பாட்டில் இருப்பது குறித்து எங்களுக்கு அரசு தகவல் அளிக்கவில்லை என்றனர். இதையடுத்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.

பின்னர் பேட்டியளித்த தீபா, எங்களை போயஸ் தோட்டத்திற்கு செல்ல அரசு அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஜெயலலிதா அரசியலுக்கு வரும் முன் நடித்து சம்பாதித்த பூர்விக சொத்துக்களுக்கு நாங்கள் உரிமை கோருவதை யாரும் தடுக்க முடியாது என்றார். 

LEAVE A REPLY