Spread the love

எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு போக்குவரத்து அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி, போலீஸ் ஸ்டேஷன் என்று பல்வேறு இடங்களிலும் தீபாவளி வசூல் தொடர்பான ரெய்டை நடத்தி முடித்திருக்கிறது லஞ்ச ஒழிப்பு போலீஸ். பல்வேறு துறை அலுவலகங்களில் சோதனை என்பது நடந்தது ஒரு சம்பவம் போல என்றாலும், உளுந்தூர் பேட்டை அருகேயுள்ள திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனை தான் ஹைலைட்டாக அமைந்தது. காரணம் இந்த ஸ்டேஷனுக்குள் லஞ்ச ஒழிப்பு போலீசார் நுழைந்த தகவல் வெளியான நொடியிலேயே மாநிலம் முழுவதிலும் போலீசார் உஷாராயினர்.

திருச்சியை பொறுத்தவரை கோட்டை, கண்டோன்மென்ட், காந்தி மார்க்கெட் போலீஸ் ஸ்டேஷன்கள் தான் 1, 2, 3 என கலெக்‌ஷனில் வரிசையில் இருப்பவை. இந்த ஸ்டேஷன்களுக்கு அதிகாரிகளுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டிய  வேலையுடன், கலெக்சனும் பார்க்க வேண்டிய கட்டாயம். என்ன செய்வது என்று யோசித்த 3 ஸ்டேஷன் அதிகாரிகளும் உடனடியாக தங்களுக்கு நம்பிக்கைக்குரிய லாட்ஜ்களில் 2 ரூம் போட்டுள்ளனர். அதில் ஒன்று கலெக்சன், மற்றொன்றில் கிப்ட்க்கு என பிரித்து வைத்துக்கொண்டு ஸ்வீட் பாக்ஸ், வெடி பாக்ஸ், துணிமணி உள்ளிட்டவைகளை கலெக்ட் செய்து வைத்து பின்னர் டிஸ்போஸ் செய்திருக்கின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால் கோட்டைக்கு வந்திருக்கும் புது இன்ஸ்பெக்டர் ரொம்ப ஸ்டிரிட் என்பதால் அவருக்கு இந்த ரூம் போட்ட விஷயமே இதுவரைக்கும் தெரியாது என்பது தான்…..

LEAVE A REPLY