Spread the love
தீபாவளி என்பது (தீபம்+ஆவளி) தீபங்களின் வரிசை என்று பொருள்படும். இதனை தீபாவளி (தீபம்+ஆவலி) என்றும் நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. ஆவளி, ஆவலி என்ற இரு பதங்களும் ஒரே கருத்தையே குறிக்கின்றன. புற ஒளி ஏற்றி உள் ஒளி  பெறுவதே தீபாவளியின் மகத்துவம்.
தீபாவளியன்று அதிகாலை பொழுதில் எண்ணெய் தேய்த்து நீராடுவதன் மூலம் தீபாவளி செயற்பாடுகள் தொடங்குகின்றன. இந்த நாளிலே செய்யப்படும் பூசைகளும் புண்ணிய கருமங்களும், ஆன்மாக்களை  நரகத்திலிருந்து காப்பதால், இது நரக சதுர்த்தகி எனப்படுகிறது. ஸ்நானத்துக்குரிய எண்ணெய் லட்சுமியாகவும், தண்ணீர் கங்காதேவி என்கின்றனர் சமய அறிஞர்கள்.
 
தீபாவளியன்று நீராடுவதை “கங்கா ஸ்நானம்” என்று சொல்வார்கள்.  தீபாவளியன்று  எந்தவொரு இடத்தில் நீராடினாலும், கங்கை நதியில் நீராடிய பலனும் ,லட்சுமிதேவி கடாட்சமும் கிடைக்கும் என்கின்றன சமய நூல்கள். 
 

LEAVE A REPLY