Spread the love

தீபாவளியன்று அதிகாலை 3.30 மணிக்கு மேல் 4.45 மணிக்குள் கங்கா ஸ்நானம் செய்வது சிறப்பு. கங்கா ஸ்நானம் செய்யும் முறை. 200 மி.லிநல்லெண்ணையில் ஒரு வரமிளகாய், இரண்டு பல்பூண்டு, 1 டீஸ்பூன் குரு மிளகு, 1 டீ ஸ்பூன் சீரகம், 1 டீஸ்பூன் வெந்தயம் இவை அனைத்தையும் கலந்து சூடு செய்யவும். நுரைத்து வரும் போது இறக்கி விடவும். இளம் சூட்டில் கால் நகக்கண் முதற்கொண்டு உச்சந்தலை வரை தேய்த்து, அரை மணி நேரத்திற்கு பின் வெந்நீரில் குளிக்கவும். குளிக்கும் போது கங்காதேவ்ய நமஹ என்று 3 முறை வணங்கி குளிக்கவும். இவ்வாறு குளித்தால் முன்னோர் சாபம் நீங்கி வளமான வாழ்வு பிறக்கும். 

LEAVE A REPLY