வில்சன் கொலையாளிகள் உடுப்பில் சிக்கினர்?

378
தமிழக-கேரள எல்லையில் குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் கடந்த 8ம் தேதி பணியில் இருந்த எஸ்ஐ வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டார்.  அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 2 பேர் இந்த கொலையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
 
பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய குமரி மாவட்டம்  திருவிதாங்கோடு, நாகர்கோவில் இளங்கடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அப்துல் சமீம் (32), தவுபிக் (28) ஆகிய 2 பேர்தான் இந்த  கொலையை செய்ததாக தெரியவந்தது. இவர்கள் 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.  குற்றவாளிகள் அப்துல் சமீம், தவுபிக் ஆகிய 2 பேரையும் போலீசார் இன்று  காலை கர்நாடக மாநிலம் உடுப்பியில் வைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரும் விரைவில் தமிழகம் கொண்டு வரப்படுகிறார்கள்.

LEAVE A REPLY