கிரண்பேடியை கூப்பிடுறாங்க டெல்லி போலீசார்!

310
Spread the love
டெல்லியில் போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலையடுத்து போலீசார் இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது, போலீசார்  டெல்லி முன்னாள் சிறப்பு போலீஸ் ஆணையர் கிரண் பேடியின் புகைப்படத்தை ஏந்தியவாறு நீங்கள் மீண்டும் இங்கு வர வேண்டும், நீங்கள் எங்களுக்கு தேவை போன்ற என்ற பதாகைகள் வைத்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.   
 
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுப்பட்ட போலீசாரை சமாதானப்படுத்திப் பேசிய டெல்லி போலீஸ் ஆணையர் அமுல்யா பட்நாயக், ‘சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் நாம் நமக்கான கடமையை சரிவர செய்யவேண்டும். ஆகையால், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் போலீசார் அமைதியான முறையில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும்’ என்றார்.
 
இதற்கிடையில், போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே கடந்த நடந்த மோதல் தொடர்பான தகவல்களை டெல்லி போலீசார் இன்று மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அறிக்கையாக வழங்கியிருக்கின்றனர்.

LEAVE A REPLY