4 பேரின் தூக்கு நிறுத்தி வைப்பு

296
Spread the love

நிர்பயா குற்றவாளிகள் அனைவரும் தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தையும் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து விசாரித்து சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் அமர்வு, அனைத்து சீராய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்தது. சிறார் என கருதக்கோரி பவன் குப்தா தாக்கல் செய்த மனுவை பிற்பகலில் விசாரித்த சுப்ரீம் கோர்ட், அதையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால் அனைத்து விதமான சட்ட முறையீடுகளும் முடிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் நிர்பயா குற்றவாளிகளை துாக்கிலிட டில்லி ஐகோர்ட் தடை விதித்துள்ளது. 4 குற்றவாளிகளும் தூக்கு தண்டனைக்கு தடை கேட்டு அடுத்தடுத்து மனு தாக்கல் செய்துள்ளதால் நிறுத்தி வைக்கப்பட்டதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக ஜன.,22ல் தூக்கிலிடுவதாக இருந்த நிலையில், பிப்.,01ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 2வது முறையாக நாளையும் தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும்.

LEAVE A REPLY